விவசாய, காணி, நீர்ப்பாசனம், மீன்பிடி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம் மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சு – (மேல் மாகாணம்)

மேல் மாகாணத்தில் விவசாயம் ,காணி, நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி மற்றும் கமநல அபிவிருத்தி துறைகளின் நடவடிக்கைகளை மிகவும் சிறப்பான வகையில் செயற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தல் மற்றும் செயற்படுத்துதல்.

தரிசனம்

மக்கள் நேயமுள்ளஅதிசிறந்த சேவை வழங்குநராதல்

குறிக்கோள்

தேசிய மற்றும் மாகாண கொள்கைகள், திட்டமிடல்களுக்கு இணங்க மிகவும் சிறப்பாக நிறுவனத்தின் சேவைகளை கிட்டச் செய்தல்

பெறுமானங்கள்

 • சேவை பெருநர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குதல்
 • அதிசிறந்த தொழில்சார் உத்தியோகாத்ததர் குழுவொன்று ஐக்கியமான குழு, வலுவான இணைப்பு
 • வெளிப்படையான, அர்பணிப்புடனான நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புடனான சேவை
 • முன்மாதிரியான மாகாண அமைச்சு
 • நவீன தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தி பலபடிமுறைகள் முன்னோக்கி
 • ஆக்கபூர்வத்திற்கு முதலிடம்

பணிக்கடமைகள்

 • மேல் மாகாணத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி மற்றும் கமநல அபிவிருத்தி துறைகளின் நடவடிக்கைகளை மிகவும் சிறப்பான வகையில் செயற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தல் மற்றும் செயற்படுத்துதல்.
 • மாகாணத்தில் விவசாயத் துறையூடான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிர்சினைகள், முரண்பாடுகள் மற்றும் தடைகள் ஆகியவற்றை அடையாளம் காணுதல்.
 • மாகாணத்தின் சிறிய நீர்ப்பாசன முறைகளை கண்டறிதல் , பராமரித்தல், முன்னேற்றுதல் மற்றும் விவசாயத் துறையின் அபிவிருத்தியின் பொருட்டு சிறந்த நீர்ப்பாசனப் பொறிமுறை ஒன்றினை நிறுவுதல்
 • நவீன தொழிநுட்பம் மற்றும் தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தி மாகாணத்தின் உற்பத்தியினை அதிகரிப்பதில் அதிகபட்ச பங்களிப்பினை வழங்குவதற்கு நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்
 • நிறுவனத்தில் இருக்கும் வளங்களை சிறப்பாக பயன்படுத்தத் தக்கதாக முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

அமைச்சின் கீழ் பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டமை  மூலமாக எதிர்பார்க்கப்படும் மக்களுக்கான பணியினை விவசாயத் துறையின் கீழ் மிகவும் செயற்றிறன் உடையதாக அமைப்பதற்கு மக்கள் நலனுடைய சிறந்த சேவை வழங்குநர் என்ற வகையில் விரிவாக்கல் மற்றும், ஒத்துழைப்பு சேவைகளை வழங்குவதற்கு தகவல் தொடர்பாடல் துறையில் அடைந்துள்ள முன்னேற்றங்களை திறம்பட பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவையினை வழங்க இந்த இணையத்தளம் உதவியாக அமையும்
என எதிர்பார்க்கிறேன். சமூக சமநிலையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அமைச்சு தொடர்பான தகவல்களை மும்மொழிகளிலும் பெற்றுக் கொள்ள இயலும் எனநம்புகிறேன்

அமைச்சின் செயலாளரின் செய்தி

சந்தன ரணவீர ஆராச்சி

மேல் மாகாணத்தில் நகரமயமாதல் மற்றும் கைத்தொழில் மயமாதல் காரணமாக விவசாயத் துறையானது பாரிய சவாலினை எதிர் நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் மாகாண விவசாய அமைச்சு என்ற வகையில் அதனோடிணைந்த திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தேசிய மற்றும் மாகாண கொள்கைகள், திட்டங்களுக்கு உட்பட்டு மிகவும் பரந்துபட்ட விரைவான சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் எண்ணத்தினை  ஈடேற்றுவதன் பொருட்டு தற்கால நவீன தொழிநுட்ப

முறைகளைகள் ஊடாக நேரடியான தொடர்பாடலை நோக்காகக் கொண்டு நிறுவப்படும்  அமைச்சின் வலைத்தளம் உரிய ஒத்துழைப்பினை நல்கும் என நம்புகின்றேன்.

கௌரவ அமைச்சரின் செய்தி